பிரித்தானியாவில் ஒரே நாளில் 93 பேர் மரணம்; 29,520 பேருக்கு கொரோனா உறுதி
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 29,520 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் கடந்த ஜூலையில் ஊரடங்கில் முழு அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனினும், நிபுணர்கள் இந்த தளர்வுகள் பரவலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் முழு ஊரடங்கிற்கு அனுமதி வழங்கினார். இதனால், சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவை கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (சனிக்கிழமை) புதிதாக 29,520 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,241,011-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 130,894-ஆக அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பெரியவர்கள் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர், அதில் 76 சதவீதம் மக்கள் இரண்டு தடுப்பூசிகளையம் போட்டுக்கொண்டுள்ளனர்.