பிரித்தானியாவில் 10 மாதங்களில் முதல் முறையாக ஒரு கொரோனா மரணம் கூட பதிவு செய்யப்படாத நாள்
பிரித்தானியாவில், 10 மாதங்களில் முதன்முறையாக நேற்று ஒரு கொரோனா மரணம் கூட பதிவாகவில்லை என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வகையில் ஒரு பாஸிட்டிவான உணர்வை மக்களுக்கு இந்த செய்தி கொடுத்துள்ளதோடு, தடுப்பூசி கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறது என்ற செய்தியையும் அது தெரிவித்துள்ளது. பிரித்தானிய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை (மே மாதம் 30ஆம் திகதி) ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன.
திங்கட்கிழமை (மே மாதம் 31ஆம் திகதி) ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். நேற்று (ஜூன் மாதம் 1ஆம் திகதி) ஒரு மரணம் கூட பதிவாகவில்லை. இதில் இன்னொரு விடயமும் உள்ளது. அதாவது நேற்று பிரித்தானியாவில் வங்கி விடுமுறை.
ஆகவே ஆவணப்படுத்துதல் தாமதமாகியிருக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், உண்மையாகவே நேற்று ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லையா என்பதை உறுதியாக இபோதைக்கு கூற முடியாது. ஒருவேளை தாமதாக தகவல் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், 3,165 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 2,439 ஆக இருந்த நிலையில், தற்போது அது 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதனால், டெல்டா வகை வைரஸால் பிரித்தானியாவில் மூன்றாவது கொரோனா அலை உருவாகுமோ என்ற ஒரு அச்சம் நிலவுவதையும் தவிர்க்கமுடியவில்லை.
ஆகவே, ஜூன் 21ஆம் திகதி பிரித்தானியா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இருந்த
திட்டத்தை சில வாரங்கள் அல்லது ஒரு மாதம் வரை தள்ளிவைக்க கோரியுள்ள அரசின்
அறிவியல் ஆலோசகர்கள், அப்படி செய்வது, இன்னும் அதிக அளவில் மக்களுக்கு கொரோனா
தடுப்பூசி போட உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.