உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கான வரியை குறைக்க பிரித்தானியா முடிவு!
பிரித்தானியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் வரி குறைக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் -19 தொற்றுநோயால் விமானத் துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பழையபடி சீராக்க உல் நட்டு விமானங்களில் பயணிகளின் வரியைக் குறைக்கவுள்ளதாக பிரதமர் போரிஸ் கஜாரசன் அறிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டு பயணங்களை அதிகரிக்க பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் நிர்வாகம் நாட்டின் சில பகுதிகளை உயர்த்துவதற்காக 20 மில்லியன் யூரோ செலவில் ரயில், சாலை, கடல் மற்றும் விமான இணைப்புகளை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
பயணிகளுக்கான வரியை குறைப்பதன் மூலம் மற்றும் சலுகைகள் வழங்குவதமுலம், இந்த கோடையில் உள்ளூர் பயணங்கள் அதிகரிக்கும் என்று அரசு நம்புகிறது.
மேலும், விரைவில் வெளிநாட்டு பயணங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டின் அடிப்படியில், பயண வரி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அதனை சீர்திருத்தும் வகையில் இந்தம முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு பிரித்தானிய விமான நிலையத்திலிருந்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு பறக்கும் பயணிகளிடம், அவர்கள் பயணிக்கும் தூரம் மற்றும் வகுப்பை பொறுத்து வரி வசூலிக்கப்படுகிறது.