பிரித்தானியாவில் புதுவித கோவிட் சிகிச்சைக்கு ஒப்புதல்
கோவிட் -19 தொற்றுக்கான முதல் ஆன்டிபாடி சிகிச்சையை பிரித்தானிய அரசு அங்கீகரித்துள்ளது .
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் வைரஸை எதிர்த்து தாக்ககூடிய இந்த புதுவித சிகிச்சைக்கு மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) ஒப்புதல் அளித்துள்ளது.
Regeneron மற்றும் Roch ஆகிய இரண்டு ஆயவகங்கல் இணைந்து இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் Ronapreve மருந்தை உருவாக்கியுள்ளன.
Ronapreve மருந்தை ஊசி அல்லது infusion எனும் நரம்பு வழியாக உட்செலுத்தலாம். இந்த சிகிச்சை நோய்த்தொற்றைத் தடுக்கவும் மருத்துவமனை சிகிச்சையின் தேவையைக் குறைக்கவும் உதவும் என MHRA கூறியுள்ளது.
கடந்த ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட சோதனை மருந்துகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த மருந்து பிரபலமாக பயன்படுத்தப்பட்டது.
இது மிகவும் விலை உயர்ந்தது மற்றும் கடுமையான நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என MHRA தெரிவித்துள்ளது.
"இந்த சிகிச்சையானது கோவிட் -19ஐ சமாளிக்க எங்கள் ஆயுதக் களஞ்சியத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க கூடுதலாக உதவியாக இருக்கும்" என்று பிரித்தானிய சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் ஒரு அறிக்கையில் கூறினார்.