அசர்பைஜான் விமான விபத்து: புடினின் மன்னிப்பை ஏற்க மறுத்த பிரித்தானியா
அசர்பைஜான் விமான விபத்து தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கேட்ட மன்னிப்பை பிரித்தானியா ஏற்க மறுத்துள்ளது.
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அசர்பைஜானின் பாக்குவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நோக்கி புறப்பட்டு, கசகஸ்தானில் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது.
மேலும், விபத்து குறித்து முறையான விசாரணை வேண்டுமென கூறியுள்ளது.
இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர், 29 பேர் உயிர் தப்பினர்.
விபத்து தொடர்பாக ரஷ்ய விமானத் தற்காப்பு நடவடிக்கைகள் நடந்ததாக ரஷ்ய அரசு விளக்கம் அளித்தாலும், ரஷ்ய ஏர்ஸ்பேஸில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்ததற்காக புடின் அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டார். எனினும், இதற்கான நேரடி பொறுப்பை ஏற்க மறுத்தார்.
பிரித்தானிய வெளியுறவுத் துறை, "இது போன்ற பதட்டமான மற்றும் பொறுப்பில்லாத செயல்கள் பிற நாடுகளின் பாதுகாப்புக்கும் நலன்களுக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்," எனத் தெரிவித்தது.
"இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்," என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யா சுயமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான விளக்கங்கள் மிகவும் முக்கியம்," என்று தெரிவித்தார்.
அசர்பைஜான் விமானத்தை ரஷ்யா தவறாக ட்ரோன் என புரிந்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனிடையே, அசர்பைஜான் ஏர்லைன்ஸ், ரஷ்ய விமான நிலையங்களுக்கு சில விமானங்களை இடைநிறுத்தியதாகவும், "உட்புற மற்றும் தொழில்நுட்ப தலையீடுகள்" காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK rejects Putin apology, Azerbaijan Airlines plane crash russia, Russia UK