ஐரோப்பிய ஒன்றியத்தின் Erasmus திட்டத்தில் மீண்டும் இணைந்த பிரித்தானியா
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் Erasmus+ மாணவர் பரிமாற்ற திட்டத்தில் மீண்டும் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2027 ஜனவரி 1 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், பிரித்தானிய மாணவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கல்வி, பயிற்சி, வேலை அனுபவம் போன்ற வாய்ப்புகளை பெற முடியும்.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களும் பிரித்தானியாவில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

பிரித்தானிய அரசு, இந்த திட்டத்தில் பங்கேற்க 570 மில்லியன் பவுண்டுகள் நிதி பங்களிப்பு செய்ய உள்ளது. ஒப்பந்தம் ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு மட்டுமே அமுல்படுத்தப்படும்.
Erasmus+ திட்டம் 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும்போது, அங்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தங்கள் சொந்த கல்வி நிறுவனத்தில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
Brexit-க்கு பிறகு, பிரித்தானியா Erasmus திட்டத்திலிருந்து விலகியது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை இழந்தனர். இப்போது மீண்டும் இணைந்திருப்பது, மாணவர்களுக்கு பெரும் நன்மையாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், பிரித்தானிய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் கல்வி துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#UKErasmus #StudentExchange #BrexitUpdate #EducationNews #EUUKDeal #GlobalEducation #StudyAbroad