ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் மீண்டும் இணைந்தது பிரித்தானியா

United Kingdom Ukraine Rishi Sunak
By Balamanuvelan Sep 08, 2023 09:43 AM GMT
Report

தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் தொகை வழங்குகிறோம். ஆனால், தங்களுக்கு அதனால் எந்த பலனும் இல்லை என்று என்ணி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா.

சரியா தவறா?

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், பணமும் ஒரு முக்கிய விடயம் என்பதை மறுப்பதற்கில்லை.

அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அதன் பட்ஜெட்டுக்கு ஆண்டுதோறும் ஒரு தொகையை வழங்கவேண்டும். இந்த தொகை நாட்டுக்கு நாடு மாறுபடும்.

அதேபோல, தேவையிலிருக்கும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி செய்யும். ஒரு கட்டத்தில், பிரித்தானிய தரப்பில் பெரும் தொகை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படுகிறது, ஆனால், பதிலுக்கு பிரித்தானியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் குறைவாக உள்ளனவே என்னும் எண்ணம் பிரித்தானியர்களுக்கு உருவானது.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் மீண்டும் இணைந்தது பிரித்தானியா | Uk Rejoins Eu Science Research Scheme Horizon

pathivu.com

இதுபோக, செழிப்பான பொருளாதாரம், குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்துக்கெதிராக பாதுகாப்பு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொது சேவைகள் திறம்பட நடைபெறுதல் என பல்வேறு விடயங்களை ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு, நிதி வழங்கும் உறுப்பு நாடுகளுக்கு உள்ளது நியாயம்தான். ஆனால், பிரித்தானியா எதிர்பார்த்த நன்மைகள் திருப்திகரமான வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து அதற்கு கிடைக்கவில்லை.

இழப்புகள்

சில பிரச்சினைகளை பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா. ஆனால், உலகம் என்பது எப்போதுமே ஒரு சமுதாயம். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு உதவி தேவைப்படத்தான் செய்யும்.

உதாரணமாக, சீனாவும் அமெரிக்காவும் அடிக்கடி உரசிக்கொண்டாலும், அமெரிக்காவுக்கு ஜூரத்துக்கான மருந்தை சீனாதான் கொடுத்தாகவேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் மீண்டும் இணைந்தது பிரித்தானியா | Uk Rejoins Eu Science Research Scheme Horizon

GETTY IMAGES 

உக்ரைன் போரில், யாருக்கு ஆதரவளித்தாலும், பல நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து தானியங்கள் கிடைத்தாகவேண்டும்.

ஆக, பிரித்தானியாவும் இதுபோன்ற விடயங்களுக்கு விதிவிலக்கல்ல. ஆம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் சில இழப்புகளையும் பிரித்தானியா எதிர்கொள்ள நேர்ந்தது. கொரோனா காலகட்டம், பொருளதார பிரச்சினைகள் ஆகியவற்றுடன், மற்றொரு முக்கிய விடயத்தை இழந்தது பிரித்தானியா.

ஐரோப்பிய ஒன்றிய ஆய்வமைப்புகள்

அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் சில முக்கிய ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அவற்றில் ஒன்று Horizon, மற்றொன்று Copernicus.

இந்த Horizon என்பது அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வமைப்பு, Copernicus என்பது புவி ஆய்வு தொடர்பான ஒரு ஆய்வமைப்பு.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் மீண்டும் இணைந்தது பிரித்தானியா | Uk Rejoins Eu Science Research Scheme Horizon

AIRBUS DS/MAX ALEXANDER 

பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று, பிரித்தானியா இந்த ஆய்வமைப்புகளில் பங்கேற்க வழிவகை செய்தாலும், வட அயர்லாந்து ஒப்பந்தம் அதற்கு தடையாக அமைந்தது. ஆகவே, கடந்த மூன்று ஆண்டுகளாக பிரித்தானியாவால் இந்த ஆய்வமைப்புகளில் பங்கேற்கமுடியாமல் போனது. அறிவியல் துறையைப் பொருத்தவரை அது ஒரு பெரிய இழப்பு.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் மீண்டும் இணைந்தது பிரித்தானியா | Uk Rejoins Eu Science Research Scheme Horizon

JET/UKAEA 

மீண்டும் இணைந்தது பிரித்தானியா

இந்நிலையில், நேற்று மீண்டும் பிரித்தானியா அந்த அமைப்புகளில் இணைந்துள்ளதால் அறிவியலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

அந்த ஆய்வமைப்புகளில் இணையும் வகையில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் மீண்டும் இணைந்தது பிரித்தானியா | Uk Rejoins Eu Science Research Scheme Horizon

இனி பிரித்தானிய அறிவியலாளர்களும், நிறுவனங்களும் அந்த அமைப்புகளிலிருந்து ஆய்வுகளுக்காக நிதி முதலான உதவிகள் கோரலாம். ஆனாலும், அது இலவசம் அல்ல. அதற்காக, பிரித்தானியா, ஆண்டொன்றிற்கு சுமார் 2.2 பில்லியன் பவுண்டுகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US