மக்கள் உட்புறங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்! அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: பிரித்தானியாவில் மீண்டும் உள்ளூர் ஊரடங்கா?
பிரித்தானியாவில் இந்திய மாறுபாடு தொற்றுகள் அதிகரித்து வரும் 8 பகுதிகளில் உள்ள மக்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் புதிய வழிகாட்டுதல் அறிவுரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டது மற்றும் கூடுதல் எச்சரிக்கையுடன் இந்திய மாறுாபட்டை அணுகுமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மாறுபாடு அதிகரித்து வரும் Kirklees, Bedford, Blackburn with Darwen, Bolton, Burnley, Leicester, Hounslow மற்றும் North Tyneside ஆகிய 8 பகுதிகளில் உள்ள மக்களுக்கு புதிய வழிகாட்டுதல் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் அறிவுரையின் படி, இந்த 8 பகுதிகளில் உள்ள மக்கள் உட்புறங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
அதாவது, முடிந்தவரை நண்பர்கள் மற்றும் உறவினர்களை உட்புறங்களில் சந்திப்பதற்கு பதிலாக வெளிப்புறங்களில் சந்திக்க அறிவுறுத்தியுள்ளது.
முடிந்தவரை குடும்ப நபர்களைத் தவிர மற்ற நபர்களுடன் 2 மீ (6 அடி) சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
முடிந்த வரை வேலை மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வாரத்திற்கு இரண்டு முறை இலவச lateral flow சோதனை செய்யுங்கள் (தொற்று உறுதியானால் என்றால் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்).
முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள், வாய்ப்பு கிடைக்கும் போது தடுப்பூசி போடுங்கள் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இது ரகசியமாக அமுல்படுத்தப்பட்ட உள்ளூர் ஊரடங்கு இல்லை என டவுனிங் ஸ்ட்ரீட் மறுத்துள்ளது.