One-in, one-out திட்டம்... ஒத்துழைக்காத பிரான்ஸ்: ஆய்வறிக்கை கூறும் தகவல்
France rejected up to half the migrants Britain tried to return under ‘one in one out’ scheme: One-in, one-out திட்டத்தின் கீழ் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பாதி பேரை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட One-in, one-out ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
One in, one out ஒப்பந்தம்
2025ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், பிரித்தானியாவும் பிரான்சும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் One in, one out என அழைக்கப்படும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

இந்த One in, one out ஒப்பந்தம் என்பது என்னவென்றால், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாத பட்சத்தில் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
ஒத்துழைக்காத பிரான்ஸ்
ஆனால், அந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரான்ஸ் தான் திருப்பி அனுப்பின புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு இணையாக பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
Chief Inspector of Borders என்னும் பொறுப்பு வகிக்கும் John Tuckett என்பவர் மேற்கொண்ட ஆய்வில், One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பாதி பேரை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஏன் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு சரியான காரணங்களும் கொடுக்கப்படவில்லை.
2025ஆம் ஆண்டு ஆகத்து மாதத்துக்கும் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடையில், 1,087 புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரான்சுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
அதே காலகட்டத்தில், 1,117 புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அதே காலகட்டத்தில் 28,000 பேர் சிறு படகுகள் மூலம் பிரித்தானியா வந்துள்ளார்கள்.
அப்படி கணக்குப் பார்த்தால், பிரான்சிலிருந்து வந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் சுமார் 4 சதவிகிதம் பேர்தான் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்கிறது John Tuckettஇன் ஆய்வறிக்கை.
ஆக, எக்கச்சக்கமாக செலவு செய்து முயற்சி செய்யப்பட்ட One in, one out திட்டம், கன்சர்வேட்டிவ் கட்சியினர் விமர்சித்ததுபோலவே படுதோல்வியைத்தான் சந்தித்துள்ளது.
விடயம் என்னவென்றால், அத்திட்டம் சென்ற மாதத்துடன், அதாவது, 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.
ஏனென்றால், பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் பாரத்தை தாங்கள் மட்டும் சுமக்க முடியாது என்று கூறிவிட்டது பிரான்ஸ்.
அத்துடன், மொத்த ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்த விடயம் தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய செய்துகொள்ளவேண்டும் என்றும் கூறிவிட்டது பிரான்ஸ்!