22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்யும் பிரித்தானியா
பிரித்தானிய அரசு, இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி முதல், புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய புலம்பெயர்தல் விதிகள்
புதிய விதிகளின்படி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா வருபவர்களுக்கான (skilled workers) குறைந்தபட்ச வருமான வரம்பு, 38,700 பவுண்டுகளில் இருந்து 41,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
வருமான வரம்பு உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, புதிய விதிகளின்படி, 111 வகையான பணி செய்பவர்கள் இனி பிரித்தானியாவுக்கு வேலைக்கு வர முடியாது.
இனி பிரித்தானியாவில் care worker வேலை செய்வதற்கு வெளிநாட்டவர்கள் வேலைக்கு எடுக்கப்படமாட்டார்கள்.
இந்த விதிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் திகதி அமுலுக்கு வருகின்றன.
அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதியில், பட்டப்படிப்பு படிக்காதவர்களுக்கான வேலைகள் செய்பவர்கள் முதல் சில பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியாது.
மேலும், ஆண்டு இறுதியில் மொழித்தகுதி, Certificates of Sponsorship (CoS), மற்றும் குடும்ப விசா தொடர்பிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |