ரஷ்யாவில் பணம் பார்த்த மோசடியாளருக்கு பிரித்தானியாவில் தங்க விசா: எழுந்துள்ள சர்ச்சை
ரஷ்யாவில் பணம் பார்த்த மோசடியாளர் ஒருவருக்கு பிரித்தானியாவில் தங்க விசா கொடுக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளதையடுத்து சர்ச்சை உருவாகியுள்ளது.
தங்க விசா
பல நாடுகள் பணக்காரர்களுக்கு சிறப்பு மரியாதை கொடுத்து தங்க விசா (golden visa) கொடுத்து அவர்களை தங்கள் நாட்டுக்கு வரவழைக்கின்றன.
சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சாதாரண மக்கள் குடியுரிமை பெற மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, பெரும் செல்வந்தர்களோ பெரும் தொகை முதலீடு செய்து எளிதாக குடியுரிமை வாங்கிவிடுகிறார்கள்.
தடைகள் விதிக்கப்பட்ட நபர்
அவ்வகையில், ரஷ்யாவில் பெரும் தொகை பார்த்த உக்ரைன் நாட்டவர் ஒருவர் தங்க விசா போன்ற சிறப்பு விசா ஒன்றைப் பெற்று பிரித்தானியாவில் வசதியாக வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளது.
Photograph: Yurii Zushchyk/Alamy
உக்ரைன் நாட்டவரான Pavel Fuks என்பவர் மீது 2021ஆம் ஆண்டு தடைகள் விதிக்கப்பட்டதுடன், மோசடி மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைகளும் உக்ரைனில் நடந்துகொண்டிருந்திருக்கின்றன.
ஆனால், 2012ஆம் ஆண்டு அவருக்கு பிரித்தானியா தங்க விசா கொடுத்துள்ளதுடன், 2017ஆம் ஆண்டு காலவரையறையின்றி பிரித்தானியாவில் வாழ அனுமதியும் வழங்கியுள்ளது. அந்த அனுமதி இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.
ஆகவே, உக்ரைனால் தடைகள் விதிக்கப்பட்டு, மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்ட, ரஷ்ய ஆதரவாளர் என அழைக்கப்படும் ஒருவர் பிரித்தானியாவில் ஆடம்பரமாக வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளதையடுத்து, Spotlight on Corruption என்னும் அமைப்பு அவருக்கெதிராக பிரச்சாரம் ஒன்றைத் துவக்கியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது முழுமையாக போர் தொடுக்க முடிவுசெய்ததைத் தொடர்ந்து, இந்த தங்க விசா திட்டத்தை 2022ஆம் ஆண்டு பிரித்தானியா ரத்துசெய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |