13 ஆண்டுகளுக்கு பிறகு சிரியாவுடன் நல்லுறவை புதுப்பித்த பிரித்தானியா
13 ஆண்டுகளுக்கு பிறகு சிரியாவுடன் நல்லுறவை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி (David Lammy), 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவுடன் டிப்ளோமாடிக் உறவை மீண்டும் நிறுவுவதாக ஜூலை 6, 2025 அன்று அறிவித்தார்.
இது, சிரியா உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின், அனைத்து சிரிய மக்களுக்கும் நிலையான, மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை கொண்ட புதிய அரசாங்கத்தை ஆதரிப்பதாக டேவிட் லாமி கூறியுள்ளார்.
டேவிட் லாமி சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி வர் அக்மட் அல்-ஷராவை (Ahmed al-Sharaa) சந்தித்தார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தான அமைச்சர் ஒருவர் சிரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பில், சிரியாவிற்கு 94.5 மில்லியன் பவுண்டு அவசர நிவாரண உதவியாக வழங்கப்படும் என லாமி உறுதியளித்தார்.
இது சிரியாவின் நீண்டகால மீட்பு நடவடிக்கைக்கும், சிரியா அகதிகளை தங்க வைத்துள்ள நாடுகளுக்குமான உதவிக்குமான பங்களிப்பாகும்.
இந்த மாற்றம், கடந்த டிசம்பரில் பஷார் அல்-அசாத் பதவி விலகிய பின்னர் மேற்கத்திய நாடுகள் சிரியாவை நோக்கி எடுத்துள்ள புதிய முயற்சியாகும்.
இதனிடையே அமெரிக்கா, ட்ரம்பின் உத்தரவால் சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா தற்போதும் முந்தைய ஆட்சி உறுப்பினர்களின் மீது தடைகளை தொடர்ந்து வைத்துள்ளது. இருப்பினும், சிரியா ஒரு நிலையான நாடாக மாறுவது பிராந்திய பாதுகாப்புக்கும், அகதிகள் பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் என லாமி தெரிவித்துள்ளார்.
சிரியாவிலிருந்து அவர் குவைத்துக்கு பயணிக்கிறார், அங்கு சூடானின் மனிதாபிமான சிக்கலை தீர்க்க புதிய ஒத்துழைப்பு குறித்து அறிவிக்க உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Syria diplomatic ties, David Lammy Syria visit, UK reopens Syria relations, Syria civil war ends 2025, UK humanitarian aid to Syria, Bashar al-Assad ousted, Syria political transition, Syria Ahmed al-Sharaa, UK sanctions Syria eased, Gulf UK foreign policy