பிரித்தானியாவில் திருமண விழா மற்றும் இறுதிச்சடங்கிற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் பற்றி தெரியுமா? வெளியான முழு விபரம்
பிரித்தானியாவில் கொரோனா காரணமாக கடுமையான விதிகள் அமுலில் இருக்கும் நிலையில், திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு போன்றவைகளுக்கு எத்தனை பேர் அனுமதிக்கப்படுவர் என்பது குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1348 பேர் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக 33552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு தேசிய அளவில் மூன்றாவது முறையாக கடுமையான ஊரடங்கு அமுலில் உள்ளது.
அப்படி கொரோனா விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கூட, 400 பேர் கலந்து கொண்ட விழாவை நடத்தியதற்காக 10,000 டொலர் அபராதமாக விதிக்கப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக ஏராளமான திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டிலும், கொரோன கட்டுப்பாடுகள் சில மாதங்கள் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த ஆண்டு திருமண விழாக்களை நடத்துவதற்கு தயார் செய்திருந்த பலரும் கவலையில் உள்ளனர்.
இது போன்ற சூழ்நிலையில் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளின் படி திருமண விழாக்களின் எத்தனை பேர் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில், திருமணம் போன்ற விழாக்கள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே நடைபெற முடியும்.
வடக்கு அயர்லாந்தில், 25-க்கும் மேற்பட்டோர் ஒரு விழாவில் கலந்து கொள்ளலாம்.
இருப்பினும் 15-க்கும் மேற்பட்ட நபர்களுடன் நிகழ்வுகள் ஆபத்தானவை என்று மதிப்பிடபடுவதால், முகக்கவசங்கள் விருந்தினர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
ஸ்காட்லாந்தில், தம்பதியர், சாட்சிகள் மற்றும் அலுவலர் உட்பட ஐந்து பேர் வரை கலந்து கொள்ளலாம். ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால் ஆறு பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
வேல்ஸில், திருமண விழாக்கள் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த முடியும். சமூக இடைவெளி கட்டாயம் தேவை, அதே சமயம் விருந்தினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை அந்த கட்டிடத்தின் அளவை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
இதே போன்று இறுதிச்சடங்கிற்கு, இங்கிலாந்தில், 30 பேர் வரை ஒன்றுகூட அனுமதிக்கப்படுகிறார்கள்.
வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்ட போதும்,இறுதி சடங்குகள் நடத்த அனுமதிக்கப்படும்.
வடக்கு அயர்லாந்தில், 25 பேர் வரை ஒரு இறுதி சடங்கில் கலந்து கொள்ளலாம், ஆனால் அதற்கு பின் நடத்தப்படும் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்தில், 20 பேர் வரை ஒரு இறுதி சடங்கில் கலந்து கொள்ளலாம், இங்கும், இறுதி சடங்கு கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
வேல்ஸில், இறுதிச் சடங்குகள் நடைபெறலாம், இங்கு வரும் மக்களின் அதிகபட்ச எண்ணிக்கை கட்டிடத்தின் திறனால் தீர்மானிக்கப்படுகிறது.