பேரணியில் ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளரின் விசா ரத்து! பிரித்தானிய உள்துறை அதிரடி
எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மொடாஸ் மாதாரின் விசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் ரத்து செய்துள்ளது.
போர் நிறுத்த பேரணி
பிரித்தானியாவின் லண்டன் நகரில் சுமார் 3,00,000 லட்சம் மக்கள் காசா மீதான தாக்குதலையும், இஸ்ரேல் - ஹமாஸ் போரையும் நிறுத்த வேண்டும் என பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணிக்கு எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளரும், யூடியூபருமான மொடாஸ் மாதார் (Moataz Matar) ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொண்டார்.
இவர் ஏற்கனவே இஸ்ரேல் மீதான ஹமாஸின் முதல் தாக்குதலை வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என்று விவரித்திருந்தார்.
2013ஆம் ஆண்டில் எகிப்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த மொடாஸ், பிரித்தானியாவுக்கு அடிக்கடி வருகை புரிபவராக இருக்கிறார். ஆனால் தற்போது அவர் நாட்டிற்கு வெளியே இருக்கிறார்.
விசா ரத்து
இந்த நிலையில் பிரித்தானிய உள்துறை அலுவலகம் மொடாஸின் விசாவை ரத்து செய்துள்ளது. முன்னதாக, இஸ்ரேலை ஹமாஸ் தாக்கிய சிறிது நேரத்திலேயே யூத-விரோத நடத்தை என்று குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உள்துறை குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்திருந்தார்.
(Aaron Chown/PA) (PA Wire)
இதனைத் தொடர்ந்து தங்கள் யூத-விரோத நடத்தை குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், உள்துறை அலுவலகத்தால் அவர்களது விசாவை ரத்து செய்யக்கூடிய குறைந்தபட்சம் 6 வெளிநாட்டவர்களின் ஒருவராக மொடாஸ் உள்ளார் என டெலிகிராப் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜென்ரிக் இதுகுறித்து ஊடகத்திடம் கூறுகையில், 'விசாவின் சிறப்புரிமையை துரஷ்பிரயோகம் செய்து தீய பயங்கரவாத செயல்களை அங்கீகரிக்கும், பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை' என்று தெரிவித்தார்.
இதன்மூலம் பிரித்தானியாவின் உள்துறையால் விசா ரத்து செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் ஆகியுள்ளார் மொடாஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |