சுந்தர் பிச்சை, ரிஷி சுனக்கை விடவும் அதிக சம்பளம் வாங்கும் பெண்... அவரது தொழில்
பிரித்தானியாவில் Bet365 என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Denise Coates என்ற பெண்மணியே, அந்த நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் கூகிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை விடவும் அதிக சம்பளம் பெற்றுள்ளவர்.
ஒன்லைன் சூதாட்ட நிறுவனம்
பிரித்தானியாவின் Stoke-on-Trent பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனம் தான் Bet365. இது ஒரு ஒன்லைன் சூதாட்ட நிறுவனம். கடந்த 2000 ஆண்டு இந்த நிறுவனத்தை Denise Coates தொடங்கியுள்ளார்.
தற்போது உலக அளவில் 90 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது Bet365 நிறுவனம். 2023ல் மட்டும் இந்த நிறுவனம் 4.3 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் ஆட்டம் தொடர்பான பிரிவு 76 மில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டு வந்தாலும் 2023ல் Denise Coates பெற்ற மொத்த வருவாய் என்பது 280 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
முந்தைய ஆண்டு 271.7 மில்லியன் டொலர் தொகையை அவர் சம்பளமாக பெற்றிருந்தார் என்றே கூறப்படுகிறது. Denise Coates பெற்றுள்ள சம்பளமானது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெறும் தொகையை விடவும் மிக அதிகம் என்றே கூறப்படுகிறது. ரிஷி சுனக் ஆண்டுக்கு 252,700 டொலர் சம்பளமாக பெறுகிறார்.
ஆண்டு வருவாய் 344 மில்லியன் டொலர்
கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் என்பது 242 மில்லியன் அமெரிக்க டொலர். Meta தலைமை நிர்வாக அதிகாரியான Mark Zuckerberg வெறும் 1 டொலர் மட்டுமே 2023ல் சம்பளமாக பெற்றுள்ளார்.
மட்டுமின்றி, 2023ல் Mark Zuckerberg எந்த போனஸ் தொகையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. Bet365 நிறுவனத்தின் 58.3 சதவிகித பங்குகளும் Denise Coates கட்டுப்பாட்டில் இருப்பதால், கூடுதல் ஈவுத்தொகையாக 127.4 மில்லியன் டொலர் பெற்றுள்ளார்.
இதனால் அவரது மொத்த ஆண்டு வருவாய் என்பது 344 மில்லியன் டொலர் என அதிகரித்துள்ளது. Bloomberg வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சம்பளம் மற்றும் ஈவுத்தொகையாக சுமார் 1.5 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு Denise Coates பெற்றுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |