செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடியது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
AI பாதுகாப்பு மாநாடு
செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த மைல் கல் என அறிவியலாளர்கள் பெருமை கொண்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது அனைத்து துறைகளிலும் கால் பதித்து பெரும் புரட்சியை செய்ய தொடங்கி வருகிறது.
The global AI Safety Summit starts in the UK today.
— Rishi Sunak (@RishiSunak) November 1, 2023
Here’s what we hope to achieve:
✅Agree on the risks of AI, to inform how we manage them
✅Discuss how we can collaborate better internationally
✅Look at how safe AI can be used for good globally
There’s more? pic.twitter.com/J4lDPiTWI3
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) பாதுகாப்பு தொடர்பான மாநாடு லண்டனில் நடைபெற்றது.
இதில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 25 நாடுகள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ரிஷி சுனக் எச்சரிக்கை
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ரிஷி சுனக், செயற்கை நுண்ணறிவு அணு ஆயுதங்களை போன்று மிகவும் ஆபத்தானது மற்றும் மனித குலத்திற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடியது என பேசினார்.
Yesterday, we agreed the first ever international statement on the risks around AI.
— Rishi Sunak (@RishiSunak) November 2, 2023
Today, I’m at @bletchleypark to discuss the global priorities for AI in the next five years, as well as what action is needed to ensure AI develops safely so it can be a force for good. pic.twitter.com/nQW6fnxLR9
அத்துடன் இதன் பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்றும், அனைவரும் இணைந்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.
மேற்கத்திய நாடு ஒன்றின் இந்த மாநாட்டில் முதல் முறையாக சீன அமைச்சர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |