ராணியின் உடல் அருகே சரிந்து விழுந்த பாதுகாப்பு அதிகாரி! இடைநிறுத்தப்பட்ட பிபிசி ஒளிபரப்பு: வைரல் வீடியோ
வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பிரித்தானிய மகாராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது.
ராணியின் உடலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த காவல் அதிகாரி நிலைத்தடுமாறி தரையில் விழுந்தார்.
வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை காவல் காக்கும் பாதுகாப்பு அதிகாரி திடீரென மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் (Westminster Abbey) வைத்து நடைபெற உள்ளது.
BBC suspends live footage of the Queen’s lying in state, after guard faints. #QueenElizabethII pic.twitter.com/6FUwfwb0qJ
— JackThompson (@Jack_Thompson_8) September 14, 2022
இதற்கு முன்னதாக பிரித்தானிய பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு ராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டி கொண்டுவரப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் நான்கு நாட்களுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்ட உள்ளது.
இந்த நிலையில் நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலிற்கு கொண்டுவரப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு காவல் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தரையில் விழுந்தார்.
ராணியின் உடலின் அருகே மிக நெருக்கமாக காவல் பணிபுரிந்து வந்த கருப்பு நிற சீருடை அணிந்த காவல் அதிகாரி திடீரென நிலைதடுமாறி முகம் தரையில் மோதும் படி சரிந்து விழுந்தார்.
PA
காவலர் சரிந்து விழுந்ததும், உடனடியாக அருகில் இருந்த இரு காவலர்கள் அவருக்கு தக்க உதவி செய்யவே அவர் மீண்டும் தனது நிலைக்கு திரும்பி தனது பணியை தொடர்ந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: அரண்மணைக்கு முத்து நகைகளை அணிந்து வந்த இளவரசி கேட்: ராயல் குடும்பம் பின்பற்றும் பாரம்பரியம்!
காவலர் மயங்கி விழுந்தது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அத்துடன் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் நிகழ்ச்சியை நேரலையில் வழங்கி கொண்டு இருந்த பிபிசி ஒளிபரப்பும் சிறிது நேரம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.