ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து கடலுக்கடியில் உள்ள கேபிள்களை பாதுகாக்க, பிரித்தானிய கடற்படையானது "ட்ரோன் நீர்மூழ்கி" கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளது.
நீருக்கடியில் பாதுகாப்பு நிலை
உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தனது தாக்குதல்களை விரிவுபடுத்தும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால், முக்கிய நீருக்கடியில் உள்கட்டமைப்பு மீதான முந்தைய தாக்குதல்களால் பாதுகாப்பு நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், பிரித்தானியா தயார் நிலையில் இருக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளது. Excalibur என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், சுமார் 19 டன் எடை கொண்டதாகும்.
இது கடந்த வாரம் டெவன்போர்ட் கடற்படை தளத்தில் இருந்து கடலுக்குள் செலுத்தப்பட்டது. இது பேட்டரி மூலம் இயங்கும் மற்றும் 15 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிளைமவுத்தை தளமாகக் கொண்ட MSubs ஆல் கட்டப்பட்டதாகும்.
1,000 மைல்கள் செல்லக்கூடிய நீர்மூழ்கி கப்பல்
இந்த கப்பலானது 1,000 மைல்கள் செல்லக்கூடியது மற்றும் 39 அடி நீளம் மற்றும் 6.5 அடி அகலம் கொண்டது. இது ஐரோப்பிய கடற்படையால் இயக்கப்படும் மிகப்பெரிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
கடலுக்கடியில் உள்ள கேபிள்களை ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க இந்த கப்பலை பிரித்தானியா கடற்படை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த கப்பல் முக்கியமான கடலுக்கு அடியில் உள்கட்டமைப்பபைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அரசாங்கத்தின் புதிய பாதுகாப்புத் திட்டங்களுக்கு மையமாக இருக்கும்.
இப்போது Excalibur இரண்டு வருட சோதனைகளில் ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், கண்டறிதலைத் தவிர்க்க தவறான தரவை அனுப்பும் அனுப்பும் இரஷ்யாவின் துணிச்சலான ஊடுருவல்களுக்கு இடையே, இந்த நீர்மூழ்கிக் கப்பல் 'நீருக்கடியிலான போர்க்களத்தில்' அதன் திறன்களை வலுப்படுத்த முயற்சிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |