பிரித்தானியாவில் 70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் பெறவுள்ள லொட்டரி பரிசு
பிரித்தானியாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் லொட்டரியில் 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதம் சுமார் 10,000 பவுண்டுகள் தரக்கூடிய பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்
பிரித்தானியாவின் டோர்கிங் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ், அவரது கணவர் கீத் இருவரும் சமீபத்தில் நேஷனல் லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வெற்றி பெற்றுள்ளனர்.
மூதாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாட தயாராகி கொண்டு இருந்த நிலையில், அவரது வீட்டு தோட்டத்தில் மணி ஸ்பைடர் சிலந்தியை பார்த்துள்ளார்.
பிரித்தானிய மக்களின் நம்பிக்கையின் படி யாரேனும் மணி ஸ்பைடர் சிலந்தியை பார்த்தால் அவருக்கு நிறைய பணம் வரும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் திகதி 70 வயது மூதாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் நேஷனல் லொட்டரியை வாங்கியுள்ளார்.
கொட்டிய பணமழை
இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற லைஃப் டிராவில் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதம் சுமார் 10,000 பவுண்டுகள் தரக்கூடிய (அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.10.37 லட்சம்) பரிசு தொகையை வெற்றி பெற்றுள்ளார்.
இந்த பரிசு தொகை தன்னை 100 வயது வரை சிறப்புடன் வாழ வைக்கும் காரணியாக இருக்க போகிறது என்று டோரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த லொட்டரி பரிசுத் தொகையுடன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ போவதாகவும் டோரிஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |