வெற்றியடைந்த டிராகன்ஃபையர் லேசர் ஆயுத சோதனை: வலுவடையும் ராயல் கடற்படை: சோதனை வீடியோ
டிராகன்ஃபையர் லேசர் ஆயுதத்தை பிரித்தானிய கடற்படையில் இணைக்கும் நடவடிக்கை முடக்கி விடப்பட்டுள்ளது.
டிராகன்ஃபையர் லேசர் ஆயுதம்
பிரித்தானியாவின் அதிநவீன டிராகன்ஃபையர் லேசர் ஆயுத அமைப்பை ராயல் கடற்படையில் நிறுவுவதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது.
டிராகன்ஃபையர் லேசர் ஆயுத அமைப்பை நேரடியாக ஸ்காட்லாந்தில் வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
With over 100 companies in the supply chain, DragonFire's economic impact stretches across the entire UK.
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) November 20, 2025
Every laser component, every circuit board, every piece of specialist equipment designed, built, and assembled in Britain.
This is defence working as an engine for growth. pic.twitter.com/ZsNwDp3M8Q
சோதனைகளில் அபார வெற்றி
டிராகன்ஃபையர் லேசர் ஆயுத அமைப்பு ஹெப்ரைட்ஸ் எல்லை பகுதியில் வைத்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், சுமார் 650 கிமீ/மணி வேகத்தில் பறக்கும் போது டிராகன்ஃபையர் லேசர் ஆயுத அமைப்பு பல ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த வேகமானது பார்முலா 1 ரேசிங் காரின் வேகத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.
Newly released footage of the UK's Dragonfire laser weapon system engaging drones at a test range.
— OSINTtechnical (@Osinttechnical) November 21, 2025
The Royal Navy confirmed today that it aims to start deploying lasers on its ships within two years. pic.twitter.com/TxjThCM0oV
சோதனைகளில் வெற்றி பெற்றதை அடுத்து, MBDA UK நிறுவனத்துடன் 316$ மில்லியன் மதிப்புள்ள பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், டிராகன்ஃபையர் லேசர் ஆயுத அமைப்பை 2027 ம் ஆண்டுக்குள் ராயல் கடற்படையில் ஒருங்கிணைப்பதாகும்.
டிராகன்ஃபையர் லேசர் ஆயுத அமைப்பானது, பிரித்தானியாவின் அடுத்த தலைமுறை இயக்க ஆற்றல் ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |