உக்ரைனுக்குள் ஊடுருவினால் என்ன நடக்கும்? புடினிடம் வெளிப்படையாக கூறிய போரிஸ்
உக்ரைனுக்குள் ஊடுருவினால் அது துயரமான தவறான கணக்கீடாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
உக்ரைன் பிரச்னை தொடர்பாக புடினை தொலைபேசியில் அழைத்து போரிஸ் ஜான்சன் பேசியுள்ளார்.
புடின் உடனான தொலைபேசி அழைப்புக்குப் பிறகு பிரித்தானியா பிரதமர் அலுவகம் வெளியிடப்பட்ட அறிக்கையில்,உக்ரேனிய எல்லையில் ரஷ்யாவின் தற்போதைய விரோத நடவடிக்கை குறித்து பிரதமர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தற்காப்பு உரிமை ஆகிய இரண்டையும் மதிக்கும் வகையில் முன்னோக்கிய வழியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
உக்ரேனிய எல்லைக்குள் இனியும் ரஷ்ய ஊடுருவினால் அது ஒரு துயரமான தவறான கணக்கீடாக இருக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நிலைமை இன்னும் மோசமடைவதை யாரும் விரும்பவில்லை என இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் .
பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகளின் முக்கியத்துவத்தையும், உக்ரைனையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றம், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சனைகளில் சமீபத்திய இருதரப்பு தகவல்தொடர்புகளை ஜான்சன் மற்றும் புடின் வரவேற்றனர் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அமைதியான தீர்வைக் காண்பதற்காக தற்போதைய பதட்டங்களுக்கு இந்த உரையாடல் உணர்வைப் பயன்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.