பிரித்தானியாவின் வெளிப்புற பூங்காவில் 40 வயதுடையவர் மரணம்: பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த 40 வயது மனிதர் உயிரிழந்ததை தொடர்ந்து மிகப்பெரிய வெளிப்புற பூங்கா அடைக்கப்பட்டுள்ளது.
40 வயது மனிதர் உயிரிழப்பு
டெவோனின் பிங்க்டனில்(Paignton) உள்ள ஸ்ப்ளாஷ் டவுன் குவேவெஸ்ட் என்ற மிகப்பெரிய வெளிப்புற பூங்காவில் 40 வயது மனிதர் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஸ்ப்ளாஷ் டவுன் குவேவெஸ்ட்(Splashdown Quaywest) பகுதிக்கு அவசர சேவைகள் விரைவாக அழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட பிறகும், பிரிஸ்டல்(Bristol) பகுதியை சேர்ந்த 40 வயது மனிதர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 23ம் திகதி புதன்கிழமை பிற்பகலில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
ஆனால் சிகிச்சை பலனின்றி நபர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிங்க்டனில்(Paignton) உள்ள வெளிப்புற பூங்கா தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |