இஸ்ரேல் மீது பொருளாதார தடைகளை விதிக்கவுள்ள பிரித்தானியா
இஸ்ரேல் மேற்கு கரையில் புதிய குடியேற்ற திட்டத்தை முன்னெடுக்க முயற்சிப்பதைத் தடுக்க, பிரித்தானியா மற்றும் பல நாடுகள் இணைந்து பொருளாதார தடைகளை விதிக்க தயாராக உள்ளன.
இஸ்ரேலின் இந்த திட்டம் E1 Development என அழைக்கப்படுகிறது. இதில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளன.
இது நடைமுறைக்கு வந்தால், மேற்கு கரை (WestBank) வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளாகப் பிரிந்து, பலஸ்தீனர்களுக்கான தொடர்ச்சியான நிலப்பரப்பு சாத்தியமற்றதாக மாறும்.
பிரித்தானியா உட்பட 9 நாடுகள், இந்த குடியேற்ற வன்முறையை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளன. மேலும் எந்த நிறுவனமும் இந்த திட்டத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 137 லேபர் எம்.பி.க்கள் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யவெட் கூப்பருக்கு கடிதம் எழுதி, " பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த உடனடி, உறுதியான நடவடிக்கை என எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலுடனான வணிகங்களுக்கு தடை விதிப்பதன் மூலம், உலகம் முழுவதும் இத்திட்டம் நிராகரிக்கப்படுகிறது என்ற வலுவான செய்தி அனுப்பப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. குழுவும், பாலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்யும் இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை, சட்டவிரோதம் என்றும் போர் குற்றம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரசு இந்த திட்டத்தில் ஈடுபடும் நிறுவங்களுக்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், முழுமையான வணிகத் தடை விதிக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த நடவடிக்கை, பாலஸ்தீனர்களின் நிலப்பரப்பை பாதுகாக்கவும், இரு நாடு தீர்வை (Two-State Solution) காப்பற்றவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |