நாடொன்றின் இராணுவ தளபதிகள் மீது பொருளாதார தடை விதித்த பிரித்தானியா
சூடானின் RSF தளபதிகள் மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் பொருளாதார தடைகள்
சூடானில் உள்நாட்டு போரானது தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பாரிய படுகொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் என வன்முறை சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வன்முறை சம்பவங்களுக்கு காரணமான சூடானின் அதிவிரைவு ஆதரவு படையின்(Rapid Support Forces) மூத்த தளபதிகள் மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
RSF படைகள் வடக்கு டார்ஃபூர் மாகாணத்தின் எல் ஃபாஷரில்(El Fasher) பகுதியில் நடத்திய பயங்கரமான அட்டூழியங்கள் ஆவணப்படுத்தப்பட்ட பிறகு பிரித்தானியாவின் இந்த பொருளாதார தடைகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட தளபதிகள்

துணைத் தளபதி அப்துல் ரஹீம் ஹம்டன் டகாலோ உட்பட 4 துணைத் தளபதிகள் மீது இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைகள் படி, இவர்களின் சொத்துக்கள் முடக்கம், பயணத் தடைகள் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
இவற்றில் கவனிக்கத்தக்க வகையில், RSF தலைவர் ஹெமெடியின் பெயர் பொருளாதார தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |