யூரோ 2020 இறுதிப் போட்டியை முன்னிட்டு பிரித்தானியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
ஞாயிற்றுக்கிழமை இரவு யூரோ 2020 இறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில், திங்கட்கிழமையன்று பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு தாமதமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிக்கு எதிரான இங்கிலாந்தின் யூரோ 2020 இறுதிப் போட்டிக்குப் பிறகு, திங்களன்று தாமதமாக தொடங்குவதற்கான வாய்ப்பை சில பள்ளி மற்றும் வணிக நிறுவனங்கள் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்குகின்றன.
55 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் ஆட்டத்தை கண்டுகளிக்க குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்களும் மிகுந்த ஆரவத்தில் இருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு (BST) துவங்கும் இந்த ஆட்டம், 11 மணிக்கு நிறைவடையும். ஆனால், ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் ஆட்டம் குறித்த நேரத்தில் முடியாது.
அதேபோல், இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றினால், அதற்கான கொண்டாட்டமும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே பிரித்தானியாவில் உள்ள சில பள்ளிகள் மற்றும் அலுவகங்கள் மறுநாள் வகுப்புகளுக்கும், வேலைக்கும் தாமதமாக வர அனுமதி அளித்துள்ளன.