பிரித்தானியாவில் 12 வயது சிறுமியை கடத்தி கொடுமைப்படுத்திய மூவர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
பிரித்தானியாவில் 12 வயது சிறுமியை கடத்தி கொடுமைப்படுத்திய மூன்று குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை கொடுமைப்படுத்திய மூவர்
பிரித்தானியாவின் கென்ட் நகரில் டோவர் பகுதியில் உள்ள அஸ்டா கார் பார்க்கில் 12 வயது சிறுமி மூவரால் காரில் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அத்துடன் தப்பித்து சென்றால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் கடத்தப்பட்டவர்களின் எச்சரிக்கைகளை மீறி சிறுமி ஜன்னல் வழியாக வெளியேறி தப்பியுள்ளார். இதன் மூலம் ஆகஸ்ட் 11ம் திகதி சிறுமியை கடத்தி துன்புறுத்திய இந்த சம்பவம் ஆகஸ்ட் 13ம் திகதி முடிவுக்கு வந்துள்ளது.
3 பேருக்கு சிறை தண்டனை
இந்த நிலையில் கேண்டர்பரி கிரவுன் நீதிமன்றத்தில், 12 வயது சிறுமியை கடத்திய கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், குற்றவாளிகள் மூன்று பேருக்கு மொத்தமாக 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கெவின் ஹோர்வாத்(26) இவான் துர்டாக்(38) மற்றும் எர்னஸ்ட் குனர்(27) ஆகிய மூவரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோர் வேதனை
தீர்ப்புக்கு பிறகு சிறுமியின் பெற்றோர் வழங்கிய தகவலில், தங்கள் மகள் மிகப்பெரிய பயத்தில் இருப்பதாகவும், இருட்டைக் கண்டு பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |