பிரித்தானிய பள்ளிகளுக்கு எச்சரிக்கை!
பிரித்தானிய பள்ளிகள் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும், ஒருசார்புடைய கற்பித்தலைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
புதிய வழிகாட்டுதலின் கீழ், பிரித்தானிய பள்ளிகள் மாணவர்களுக்கு உணர்ச்சிகரமான பிரச்சினைகளை பக்கச்சார்பற்ற முறையில் கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் போன்ற சிக்கலான தலைப்புகளை ஆசிரியர்கள் எளிதாக கற்பிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கல்விச் செயலாளர் நதீம் ஜஹாவியின் கூற்றுப்படி, எந்தவொரு பாடமும் வரம்பற்றதாக இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள பள்ளி வழிகாட்டுதலில் உள்ள அரசியல் பாரபட்சமற்ற தன்மை, பாடங்களைத் திட்டமிடும்போதும் வகுப்புப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போதும் கவனமாக சிந்திக்குமாறு பள்ளிகளை வலியுறுத்துகிறது.
தங்கள் பிள்ளைகள் 'தேவையற்ற அரசியல் பார்வைக்கு' ஆளாகியிருப்பதாகக் கருதும் பெற்றோர்கள் எழுப்பும் கவலைகளைத் தீர்க்க முயற்சிக்குமாறு பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
1996 கல்விச் சட்டத்தின்படி வகுப்பில் பாகுபாடான அரசியல் பார்வைகளை ஊக்குவித்தல் சட்டவிரோதமானது. ஆசிரியர்கள் ஒரு பாடத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை முன்வைத்தால், அவர்கள் ஒரு சமநிலையான கண்ணோட்டத்தையும் வழங்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது.