பிரித்தானியாவில் பயங்கர வெடிவிபத்து: சுக்கு நூறாகிப் போன 3 வீடுகள்., உயிருக்கு போராடும் 4 பேர்
பிரித்தானியாவில் சமையல் எரிவாயு வெடித்ததில் கிட்டத்தட்ட 3 வீடுகள் சுக்குநூறாக வெடித்து சிதறியது.
குறித்த சம்பவம் ஸ்காட்லாந்தின் Ayrshire கவுன்டியில், Kincaidston பகுதியியல் Gorse Park-ல் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது.
அடுத்தடுத்து ஒன்றாக கட்டப்பட்டிருக்கும் நான்கு வீடுகளில், ஒரு வீட்டில் சமையல் எரிவாயு வெடித்துள்ளது.
மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் போல் சத்தம் எழுந்தநிலையில், அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளை விட்டு வெளிய வந்து பார்த்துள்ளார். அப்போது, மூன்று வீடுகள் சுக்குநூறாக வெடித்து அப்பகுதி முழுக்க குப்பைகளாக விழுந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இரண்டு வீடுகள் பாதி நொறுங்கிக்கிடந்த நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட வீடு முற்றிலுமாக தரைமட்டமானது. வீட்டின் சிறு பகுதி அல்ல, ஒரு சிறு ஓடு கூட முழுதாக மிஞ்சவில்லை.
அதனை ஒட்டியிருந்த நான்காவது வீடும் சேதமடைந்துள்ளது. மேலும், விபத்துப்பகுதியை சுற்றி 50 மீற்றர் சுற்றளவில் வீட்டின் குப்பைகள் சிதறி காணப்பட்டது.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தயடுத்து, இரவு 7.10 மணியளவில் ஏராளமான பொலிஸார் மற்றும் தீயணைப்பு மட்டும் மீட்பு குழுக்கள் Gorse Park பகுதியில் குவிந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து, ஆக்கப்பக்கத்தினர் ஒருவர் கூறுகையில், இது ஒரு சினிமா காட்சி போல் இருக்கிறது, ஒரு வீடே முற்றிலுயமாக மாயமானது என விவரித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக, அப்பகுதி கவுன்சிலர் Chris Cullen கூறுகையில், எரிவாயு வெடித்ததனால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. "உண்மையில் மிகவும் வேதனையானது. நேற்று முன்தினம் மாலை ஒரு வரிசை வீடுகள் இருந்தன, இப்போது அதில் மிகப்பெரிய துளை ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை வீடுகள் காணாமலேபோனது.
குப்பைகள் விழுந்த தூரத்தையும் மற்றும் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என்று அவர் கூறினார்.
அப்பகுதில் இப்போது அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் மற்றும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு 10 நாட்கள் வரை ஆகலாம் என்றும் Cullen கூறினார். அதுவரை அவர்களைப் பராமரிக்க ஓய்வு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








