ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா எடுத்துள்ள தைரியமான முடிவு
ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரித்தானியா அதன் ராணுவ படைகளில் உள்ள சில போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்களை அகற்ற (scrap) முயிடவு செய்துள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜான் ஹீலி (John Healey), நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பாதுகாப்புத்துறை செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த முடிவின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக நீக்கப்படும் ஆயுதங்கள்
- ராயல் நேவியின் இரண்டு அம்பிபியஸ் தாக்குதல் கப்பல்கள் - HMS Albion மற்றும் HMS Bulwark
- ராயல் ஏர்போர்ஸின் 17 Puma ஹெலிகாப்டர்கள் மற்றும் 14 பழைய Chinook ஹெலிகாப்டர்கள்
- 46 Watchkeeper ட்ரோன்கள், இவை ஒவ்வொன்றும் சுமார் £5 மில்லியன் மதிப்புடையவை
- ராயல் நேவியின் HMS Northumberland என்ற Type 23 frigate கப்பல்
- Royal Fleet Auxiliary கப்பல்கள் - RFA Wave Knight மற்றும் RFA Wave Ruler
இவை அனைத்தும் பழமையானவை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இவற்றை பராமரிக்க அதிக செலவாகும் என்பதால் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறை வரவுகளை புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது முக்கியம் என கருதப்படுகிறது.
எதிர்வினைகள்
- ரஷ்யா-உக்ரைன் போர் பழைய ஆயுதங்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நிலையில், இதனை சுட்டிக்காட்டி இந்த முடிவு சர்ச்சைகளை உருவாக்கலாம்.
- குறிப்பாக ட்ரோன் போர் வளர்ச்சியுடன் Watchkeeper ட்ரோன்களின் அகற்றம் விமர்சனத்துக்குள்ளாகும்.
எவ்வாறாயினும், இந்த முடிவு எதிர்கால பாதுகாப்புத் தேவைகளுக்காக முதலீட்டை திசை திருப்புவதற்கான முயற்சியாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK to scrap warships, helicopters and drone fleet, UK Russia