பிரித்தானிய கடற்கரையில் பட்டப்பகலில் கத்திக்குத்து: பொலிஸார் தேடுதல் வேட்டை
பிரித்தானியாவில் 18 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வொர்திங்(Worthing) கடற்கரையில் உள்ள மரைன் பரேட்(Marine Parade) பகுதியில் 18 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
மதியம் சுமார் 1.17 மணியளவில் சசெக்ஸ் காவல்துறைக்கு மூன்று பேர் சம்பந்தப்பட்ட கத்திக்குத்து வன்முறை சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் படி, கடற்கரை பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் விரைந்தனர்.
இதையடுத்து அங்கு கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தப்பி ஓடிய நபர்கள்
இந்நிலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களும் உடனடியாக அப்பகுதியை விட்டு தப்பியோடியுள்ளனர்.
அவர்கள் வெள்ளை நிற தோற்றமும், கருப்பு நிற ஹூடியும் அணிந்திருந்தார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சந்தேக நபர்களை கைது செய்து பொதுமக்களின் நேரடி உதவியை வலியுறுத்துவதாக துப்பறியும் அதிகாரி நீல் வாக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |