வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்-க்கு வழங்கப்பட்ட ரகசிய எஸ்டேட்: புகைப்படம்
வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கு வழங்கப்பட்ட ரகசிய எஸ்டேட்.
சார்லஸ், மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து புதிய வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கு சொத்து மரபுரிமையாக செல்வதாக கருத்து.
ராணியின் மரணத்திற்குப் பிறகு இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் பண்டைய ல்வினிவெர்மோட் தோட்டத்தை மரபுரிமையாக பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அத்துடன் சார்லஸ் பதவி வகித்த வேல்ஸ் இளவரசர் பட்டத்தை அவரது மூத்த மகன் வில்லியம் மரபு வழியாக வழங்க பெற்றார்.
North Wales Live
இதன் மூலம் ராணியாரின் மரணத்திற்கு பிறகு புதிய வேல்ஸ் இளவரசராக வில்லியமும், அவரது மனைவி கேட் மிடில்டன் வேல்ஸ் இளவரசியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது ராணி கன்சார்ட் கமீலா அடிக்கடி அமைதியாக வசிக்கும் லாண்டோவேரிக்கு அருகிலுள்ள மைட்ஃபாயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ல்வினிவெர்மோட் தோட்டம், (Llwynywermod Estate) தற்போது புதிய வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் மரபுரிமையாக பெற்றுள்ளனர்.
Carmarthenshire மூலையில் அமைந்துள்ள பரந்து விரிந்த இந்த பழங்கால சொத்துகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் மன்னரால் வாங்கப்பட்டது.
GETTY
கூடுதல் செய்திகளுக்கு: அரைசதம் விளாசி அசத்திய சூர்யகுமார் யாதவ்: விரட்டிய டேவிட் மில்லர்.., திரில் டி 20 போட்டி!
அங்கு மன்னர் சார்லஸ் ஒவ்வொரு ஆண்டும் செயின்ட் டேவிட் தினத்தில் இந்த பழங்கால சொத்திற்கு வருகை தந்து, அவரது அழகான நேரத்தை செலவழித்து வந்துள்ளனர் என வேல்ஸ் ஆன்லைன் தெரிவித்துள்ளது.
Publicity Picture