குளிர் சாதனப் பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காப்பாற்ற பிரித்தானியாவில் ரகசிய ஆபரேஷன்
Tens of thousands of UK fridges secured from hackers in secret nationwide operation: பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ரகசிய ஆபரேஷன் ஒன்று, பல்லாயிரக்கணக்கான குளிர் சாதனப் பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளது.
பிரான்ஸ் துவங்கி பல்வேறு நாடுகளில் குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் குளிர் சாதன அமைப்புகள் ஹேக்கர்களால் சைபர் தாக்குதலுக்கு உள்ளான விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குளிர் சாதனப் பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காப்பாற்ற, பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ரகசிய ஆபரேஷன் குறித்து பிபிசி ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் ரகசிய ஆபரேஷன்
கடந்த மாதம், அதாவது அக்டோபரில், பிரான்சிலுள்ள பல குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் குளிர் சாதன அமைப்புகள் ஹேக்கர்களால் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக, ஏராளமான உணவுப்பொருட்கள் வீணாகின.

அதைத் தொடர்ந்து, அப்பாடா, நாம் தப்பினோம் என்ற எண்ணமே பிரித்தானியாவில் பலருக்கும் உருவானது.
உண்மை என்னவென்றால், பாதுகாப்பு தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள், அக்டோபர் இறுதி வாக்கில், பிரித்தானிய குளிர் சாதன அமைப்புகளில், ஹேக் செய்யப்படுவதற்கு எளிதான ஒரு விடயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதை மட்டும் ஹேக்கர்கள் கண்டுபிடித்திருந்தால், பிரான்சைவிட பிரித்தானியாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்ககூடும்.
ஆக, உடனடியாக, ஆய்வாளர்களும் தகவல் தொழில்நுட்ப குழுக்களும் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து ரகசிய ஆபரேஷன் ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
பின்னர், தேசிய சைபர் பாதுகாப்பு மையத்துடன், சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரங்கள் துறையும், உணவு தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சியும் இணைந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நிறுவனங்களை அழைத்து விடயத்தை விவரித்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக, பல்லாயிரக்கணக்கான குளிர் சாதன அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் ஆயிரக்கணக்கான கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒன்லைனிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

சில நிறுவனங்களில் பணியாளர்களே நேரடியாக களத்தில் இறங்கி தினமும் நூற்றுக்கணக்கான கேபிள்களை துண்டித்துள்ளார்கள்.
அடுத்த ஹேக்கிங் நிகழ்வதற்குள் எப்படியாவது இணைப்பைத் துண்டித்துவிடவேண்டும் என, நேரத்துடன் போட்டிபோடுவதுபோல வேகவேகமாக செயல்பட்டோம் என்கிறார் சம்பந்தப்பட்ட ஊழியர் ஒருவர்.
எங்கள் சேமிப்பகங்களில் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய உணவுப்பொருட்கள் உள்ளன. ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் அவ்வளவும் நாசமாகியிருக்கும் என்கிறார் அவர்.
ஆக, பிரித்தானியாவின் ரகசிய ஆபரேஷன், பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய உணவுப்பொருட்களை காப்பாற்றியுள்ளது!