பிரித்தானியா நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது! புடினுக்கு வெளியுறவு செயலாளர் எச்சரிக்கை
ட்ரம்பின் ஆதரவைத் தொடர்ந்து, பிரித்தானியா நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக வெளியுறவு செயலாளர் யவெட்டே கூப்பர் புடினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு
ரஷ்ய விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தியதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரித்தார். உக்ரைனுக்கு ஆதரவும் அளிக்கும் தொனியில் அவர் பேசியது பரபரப்பாகியுள்ளது.
இந்த சூழலில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் காமன்வெல்த் விவகாரங்களுக்கான செயலாளர் யவெட்டே கூப்பர் பேசினார்.
அப்போது அவர் ரஷ்யாவைக் குறிப்பிட்டு பிரித்தானியா நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.
தயாராக இருப்போம்
இதுகுறித்து பேசிய யவெட்டே கூப்பர் (Yvette Cooper), "உக்ரைனின் பாதுகாப்பு எங்கள் பாதுகாப்பு, நாம் அனைவரும் ஐ.நா.சாசனத்தை நிலைநிறுத்துவதில் தங்கியுள்ளோம். ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், மோதலைப் பாதுகாக்கவும், ஐரோப்பாவின் எல்லைகளுக்கு அப்பால் உறுதியற்ற தன்மையைப் பரப்பவும் முயல்கின்றன.
சமீபத்திய வாரங்களில் எஸ்டோனியா, போலந்து மற்றும் ருமேனியாவில் நேட்டோ வான்வெளியில் ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற மீறல்களை நாங்கள் கண்டிருக்கிறோம்.
இதற்கு எதிராக நேட்டோ உறுதியாக நிற்கிறது, மேலும் நாங்கள் செயல்படத் தயாராக இருப்போம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |