கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா
உக்ரைன் போரில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்துவரும் நிலையில், பிரித்தானிய அரசு 1.2 லட்சம் ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி, "ரஷ்யா கவனத்தை மத்திய கிழக்கில் நடக்கும் போருக்கு திருப்ப முயற்சிக்கிறது. ஆனால் உக்ரைனுக்கு ஆதரவு தொடரும்" என கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பானது, பெர்லினில் நடைபெறும் 50 nation Ukraine Defence Contact Group கூட்டத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டது.
இந்த ட்ரோன் தொகுப்பில், long-range strike drones, reconnaissance drones, logistics drones என பல்வேறு வகையான ட்ரோன்கள் அடங்கும். அவற்றில் பெரும்பாலும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்டவை.

சமீபத்தில் ரஷ்யாவின் ஒரு நிலையை தரைவழி மற்றும் வான்வழி ட்ரோன்களைப் பயன்படுத்தி கைப்பற்றியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். இது, ட்ரோன்களின் முக்கியத்தவத்தைக் வெளிப்படுத்துகிறது.
மேலும் பிரித்தானிய அரசு உக்ரைனுக்கு 752 மில்லியன் நிதி உதவியும் அறிவித்துள்ளது. இது 3.36 பில்லியன் கடனின் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில், ரஷ்யா ஒடெசா மற்றும் சுமி பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அவசர சேவை தெரிவித்துள்ளது.
போர் ஐந்தாவது ஆண்டாக நடந்துவரும் நிலையில்,, உக்ரைன் முழுமையான போர்நிறுத்தத்தை கோருகிறது. அனால், ரஷ்யா முதலில் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Ukraine drone package 2026, Ukraine war drones support, John Healey Ukraine defence, Zelensky drone warfare Russia, NATO Ukraine defence Berlin, UK military aid Ukraine, Russia Ukraine ceasefire talks #UkraineWar #UKSupport #DroneWarfare #MilitaryAid #RussiaUkraineConflict #NATODefence #Zelensky