உக்ரைனுக்கு விரைவாக 5,000 ஏவுகணைகளை வழங்கவுள்ள பிரித்தானியா
உக்ரைனுக்கு 5,000 ஏவுகணைகளை பிரித்தானிய அரசு வழங்கவுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உக்ரைனின் விமானப்படை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 5,000 இலகுரக ஏவுகணைகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் நடைபெறும் போர் சூழலில், குளிர்காலத்தில் உக்ரைனின் மின்சார அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சிகளை எதிர்கொள்ள இது முக்கிய நடவடிக்கையாகும்.
இந்த அறிவிப்பு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் Coalition of the Willing கூட்டமைப்பில் உள்ள உலக தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்டது.

இந்த கூட்டத்தில், ரஷ்யாவின் உள்நாட்டு பகுதிகளை தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
"உக்ரைனின் பொதுமக்கள் மற்றும் ஆற்றல் கட்டமைப்புகளை பாதுகாக்கும் வகையில் 5,000 ஏவுகணைகளை வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்துகிறோம்" என ஸ்டார்மர் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை உலக சந்தையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவின் முக்கிய எரிவாயு நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது தடைகள் விதித்தமைக்கு ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின், "எந்தவொரு அழுத்தத்திற்கும் ரஷ்யா தலைவணங்காது" என கூறி, தீவிர பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Ukraine missiles, Keir Starmer Ukraine support, UK air defence aid, Ukraine war winter defence, Coalition of the Willing summit, Russia sanctions Rosneft Lukoil, Zelensky missile support, UK 5000 lightweight missiles, Ukraine energy infrastructure, UK military aid to Ukraine