பிரித்தானிய சாலையில் பெண்களிடம் அத்துமீறிய சீரியல் கிஸ்சர்: நீதிமன்றம் வழங்கிய வினோத தண்டனை
பிரித்தானியாவில் நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சீரியல் கிஸ்சருக்கு நீதிமன்றம் வினோத தண்டனை ஒன்று விதித்துள்ளது.
பெண்களிடம் அத்துமீறும் சீரியல் கிஸ்சர்
பிரித்தானியாவில் நடை பயிற்சிக்கு சென்ற 6க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மிர்சா முகமது சயீத் என்ற 64 வயது முதியவருக்கு நகர ஷெரீப் கோர்ட் நூதன தண்டனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மிர்சா முகமது சயீத் காலையிலேயே கையில் கேமராவுடன் வீதிக்கு வந்து, அங்கு நடைப்பயிற்சி வரும் பெண்களிடம் கேமராவில் புகைப்படம் எடுத்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
அவரின் கோரிக்கையை ஏற்று புகைப்படம் எடுத்து தரும் பெண்களிடம், நாம் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வோமா என்று கோரிக்கை வைக்கிறார், அப்போது தயங்கி நிற்கும் பெண்களின் கைகளில் திடீரென முத்தமிட்டு விடுகிறார்.
பின் உதட்டிலும் முத்தமிட முயற்சித்துள்ளார். ஆனால் இவரின் இத்தகைய அத்துமீறல் குறித்து உறுதியான சாட்சிகள் இல்லாததால் இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் தொடர்ந்து கொண்டே சென்றது.
விநோத தண்டனை
இறுதியில் இது போன்று 7 பெண்களிடம் அத்துமீறியதை ஒப்புக் கொண்ட மிர்சா முகமது சயீத், ஆனால் இதே போன்ற வேறு சில பாலியல் குற்றங்களை தான் செய்யவில்லை என்பதை உறுதியாக மறுத்தார்.
இதையடுத்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து மாற்று தண்டனையை மிர்சா தேர்ந்தெடுத்து கொண்டுள்ளார்.
getty
அதனடிப்படையில், மிர்சா கேமராக்களின் கண்காணிப்பின் கீழ் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை கிட்டத்தட்ட 189 நாட்கள் வீட்டுக் காவலில் இருப்பார்.
மேலும் மேற்பார்வையாளரின் கண்காணிப்பின் கீழ் பொது சேவையில் 2 ஆண்டுகளுக்கு ஈடுபட வேண்டும், அத்துடன் சம்பளம் இல்லாமல் 252 மணி நேரங்கள் வேலையில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.