பிரித்தானியா கேம்ப் பெஸ்டிவல் இசை விழா: குழந்தை ஒன்றுக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவில் நடைபெற்ற கேம்ப் பெஸ்டிவல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தை ஒன்றுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரிதாபம்
பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர் பகுதியில் நடைபெற்ற கேம்ப் பெஸ்டிவல் இசை விழாவில் குழந்தை ஒன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஆகஸ்ட் 17 முதல் 20ம் திகதி வரை இந்த இசை விழா வெஸ்டன் பூங்காவில் நடத்தப்பட்டது, இதில் ரூடிமென்டல் மற்றும் சோஃபி எல்லிஸ்-பெக்ஸ்டர் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.
குழந்தை ஒன்று உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு சனிக்கிழமை அதிகாலை பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் குழந்தை உயிரிழந்தற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் குழந்தையின் குடும்பத்தினருடன் தங்களது எண்ணங்களும் அனுதாபங்களும் இருப்பதாக கேம்ப் பெஸ்டிவல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |