உக்ரைன்-பிரித்தானியா இடையே 100 ஆண்டு கால நட்புறவு ஒப்பந்தம்: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சுற்றுப்பயணம்
உக்ரைனுடன் நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் இன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கையெழுத்திட உள்ளார்.
உக்ரைன் சுற்றுப்பயணம்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தின் முக்கிய அம்சமாக, உக்ரைன்-பிரித்தானியா இடையே நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் பிரித்தானிய பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கையெழுத்திட உள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ள நிலையில், இந்த ஒப்பந்தமானது கையெழுத்தாக உள்ளது.
பிரித்தானிய பிரதமர் தகவல்
இந்த 100 ஆண்டு கால ஒப்பந்தமானது உக்ரைனுடனான பிரித்தானியாவின் வலுவான ஆதரவை உறுதிப்படுத்துவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பான அரசியல் பிரகடனம் வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனை அதன் கூட்டாளிகளிடம் இருந்து பிரித்தெடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் திட்டங்கள் தோல்வியடைந்து இருப்பதாகவும், உக்ரைன் மற்றும் அதன் கூட்டாளிகளின் நட்புறவு முன்பை விட தற்போது வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |