தொழில் துறையை மேம்படுத்தும் முயற்சி: உலகளாவிய காபி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரித்தானியா
தொழில் துறையை மேம்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா உலகளாவிய காபி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்து
காபி வளர்ப்பு மற்றும் நிலையான காபி நுகர்வு உட்பட சம்பந்தப்பட்ட தொழில் துறையின் மிக முக்கியமான சில சிக்கல்களை சமாளிக்கும் நோக்கில் முக்கிய உலகளாவிய காபி துறை ஒப்பந்தத்தில் பிரித்தானியா வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளது.
சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் துறை, சர்வதேச காபி அமைப்பு (ஐசிஓ) மற்றும் பிரிட்டிஷ் காபி அசோசியேஷன் (பிசிஏ) ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், 'சர்வதேச காபி ஒப்பந்தம் (ஐசிஏ)2022' இல் உணவு மற்றும் விவசாய அமைச்சர் மார்க் ஸ்பென்சர் கையெழுத்திட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rawpixel.com/Shutterstock
தேசிய அரசாங்கங்களுடன் இணைந்து ரோஸ்டர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற தனியார் துறை நிறுவனங்களுக்கு உலக காபி துறையின் நிலைத்தன்மை முயற்சிகளை முன்னெடுப்பதில் முதல் முறையாக இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கை வழங்குகிறது.
அமைச்சர் விளக்கம்
இந்த சர்வதேச ஒப்பந்தம் உலகளாவில் காபி தொழில்துறையை வென்றெடுக்கும், மேலும் காபிக்கான நிலைத்தன்மைக்கான அதன் உந்துதலை தொடர பிரித்தானியா உதவ முடியும் என்று நான் நம்புகிறேன் என உணவு மற்றும் விவசாய அமைச்சர் மார்க் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.
Reuters
உற்பத்தி ஒதுக்கீட்டின் மூலம் உலகளாவிய காபி விலைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் 1962 ஆம் ஆண்டில் உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகளுக்கு இடையே முதல் ICA கையெழுத்தானது, ஆனால் அவை பின்னர் சரிந்தது.