பிரித்தானியாவின் ஆறு பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை... மின்னல், ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு
பிரித்தானியாவில் 6 பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும்
பிரித்தானியாவில் இன்று பிற்பகுதியில் மணிக்கு 50 மைல் வேகத்தை எட்டக்கூடிய அதிக காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புயல் சூழ்நிலையில் கனமழையுடன் 1 செமீ அளவிலான ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் புயல் மேகங்கள் அட்லாண்டிக்கில் இருந்து தென்மேற்கு நோக்கி நகர்ந்து நாடு முழுவதும் வியாபித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்தை உள்ளடக்கிய ஆறு பிராந்தியங்களில் காற்றினால் சிறிய அளவிலான சூறாவளிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மழை பெய்யும்
பலத்த காற்று, ஆலங்கட்டி மழை, அவ்வப்போது மின்னலும் எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது, இது சில சமயங்களில் கனமாகவும், கிழக்கு நோக்கி பரவக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 18 டிகிரி செல்சியஸ் என இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். சூறாவளிக்கு வாய்ப்புள்ள பகுதிகள் SW England, Cent S England, SE England, S Midlands, Parts of East Anglia, Channel Islands என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |