பிரித்தானியாவில் ஸ்கை டைவிங் விபத்து: 49 வயது வீரர் பரிதாபமாக உயிரிழப்பு
பிரித்தானியாவில் ஸ்கை டைவிங் விபத்தில் 49 வயது நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஸ்கை டைவிங் வீரர் உயிரிழப்பு
சனிக்கிழமை மதியம் பிரித்தானியாவின் டேவன் பகுதியில் ஏற்பட்ட ஸ்கை டைவிங்(Skydiving) விபத்தில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டன்கேஸ்வெல் ஏரோட்ரோமில் இருந்து ஸ்கை டைவிங் செய்த வீரர் ஒருவர் குறித்த கவலை அதிகரித்ததை தொடர்ந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட டைவிங் வீரருக்கு தேவையான அனைத்து முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழி விளையாட்டுகளுக்கான முக்கிய தளமாக பிளாக் டவுன் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள டன்கேஸ்வெல் ஏரோட்ரோம் பகுதி அமைந்துள்ளது.
இங்கு ஸ்கை டைவிங், ஹெலிகாப்டர் பயிற்சி மற்றும் வணிக ரீதியான வான் வழிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |