பிரித்தானியாவில் 45 நாடுகள் மீதான பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு!
பிரித்தானியாவில் சிவப்பு பயணப் பட்டியலில் இருந்து குறைந்தது 45 நாடுகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை இந்த வார இறுதியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்கவுள்ளதாக சண்டே டெலிகிராப் பத்திக்கையில் வெளியாகியுள்ளது.
தற்போது பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் 54 நாடுகள் உள்ளன. அதில் 9 நாடுகளுக்கு மட்டும் பயணத் தடையை நீட்டிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 45 நாடுகளைச் சேர்ந்த முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி தனிமைப்படுத்தல் தேவைப்படாது. அதில் பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும் என கூறப்படுகிறது.
Photograph: Guy Bell/Rex/Shutterstock
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வியாழக்கிழமை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் இனி பிரித்தானியாவுக்கு வரும்போது அரசு நியமிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
அதேபோல், சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக 2 தடுப்பூசிகள் செலுத்தியிருந்தால், அவர்கள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்பு கோவிட் -19 சோதனையை எடுக்க தேவையில்லை .
மேலும், பிரித்தானியாவுக்கு வந்ததும் இரண்டு நாட்களுக்குப் பிறகு பிசிஆர் சோதனையும் எடுக்க வேண்டியதில்லை என்றும் அதற்குப் பதிலாக மலிவான பக்கவாட்டு ஓட்டத்தைத் தேர்வு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.