அகதிகள் விஷயத்தில்...பிரித்தானியா முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த பிரான்ஸ்!
தங்கள் நாட்டுக்குள் அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக பிரித்தானியா முன்வைத்த கோரிக்கையை பிரான்ஸ் நிராகரித்துள்ளது.
பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு அகதிகள் பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் எல்லாம் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு பிரித்தானியா பிரதமா் போரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பிரித்தானியா வரும் அனைத்து அகதிகளையும் பிரான்ஸ் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும், அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் பிரித்தானியா படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா்.
ஆனால், இந்த திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அரசின் செய்தித் தொடா்பாளா் கேப்ரியல் அட்டல் தெரிவித்தாா். போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வரும் அகதிகள், பிரான்ஸிலிருந்து அதிக வாய்ப்புகளைத் தேடி பிரித்தானியாவிற்கு செல்வது தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
அவ்வாறு வருவதற்கு தரமற்ற படகுகளில் அவா்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அகதிகளை சட்டவிரோதமாகக் கடத்தும் கும்பல்கள் அவா்களுக்கு உதவி செய்து வருகின்றன.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25,700 போ் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகம் ஆகும்.
அடிக்கடி மாறும் காலநிலை, கடும் குளிா், கடல் போக்குவரத்து நெரிசல் போன்ற சூழலில் சிறிய படகுகளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை அளவுக்கு அதிகமாக ஏற்