பிரித்தானியாவின் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து: மனித உடல் மீட்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தகவல்
பிரித்தானியாவில் தீ விபத்தில் நடந்த Treforest பகுதியில் இருந்து உடல் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தீ விபத்து
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Treforest தொழிற் பேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பிறகு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக தெற்கு வேல்ஸ் பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த தீ விபத்தில் சிக்கிய மனிதர் ஒருவரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Another view of the fire as it continues to rage in Treforest - latest updates here - https://t.co/f2Twt2EY0g pic.twitter.com/5nYXaMheaZ
— WalesOnline ??????? (@WalesOnline) December 13, 2023
ஆனால் உயிரிழந்தவர் யார் என்ற அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய தெற்கு வேல்ஸ் காவல்துறையின் கண்காணிப்பாளர் ரிச்சர்ட் ஜோன்ஸ், காணாமல் போனவரின் குடும்பத்திற்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sky News
மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியை சுற்றிய சில இடங்களில் போக்குவரத்து மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
uk, Wales, United Kingdom, Fire, Treforest Fire,