புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப கோடிக்கணக்கில் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக இரு நாடுகளுக்குமிடையில் ’one in, one out’ என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், அந்த one in, one out ஒப்பந்தத்தின் கீழ் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய மக்களுடைய வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுவதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
64 கோடி ரூபாய்
சமீபத்தில், 32 புலம்பெயர்ந்தோர் விமானம் ஒன்றில் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

அதற்காக 1.52 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு புலம்பெயர்ந்தோருக்கு 48,800 பவுண்டுகள் செலவு. ஆக, 32 பேருக்கு சுமார் 1.52 மில்லியன் பவுண்டுகள் செலவு. இலங்கை மதிப்பில் 1.52 மில்லியன் பவுண்டுகள் என்பது 64,47,33,080.00 ரூபாய் ஆகும்.
இதுவரை, one in, one out ஒப்பந்தத்தின் கீழ் 498 புலம்பெயர்ந்தோர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். 482 புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டப்படி வந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |