பிரித்தானிய வரலாற்றில் முதல்முறையாக M16 உளவு அமைப்புக்கு பெண் தலைமை - யார் இந்த பிளேஸ் மெட்ரூவேலி?
M16 உளவு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய உளவு அமைப்பு M16
ஒரு நாட்டின் மக்களும், அரசும் பாதுகாப்பாக இருக்க அந்த நாட்டின் உளவுப்பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுவாக பெரும்பாலான நாடுகள் உள்நாட்டிற்கு தனி உளவு அமைப்பும், வெளிநாடுகளுக்கு தனி உளவு என வைத்திருக்கும்.
வெளிநாடுகளுடனான உறவுகளை பேணுவது, அரசுக்கு எதிரான சதித்திட்டங்களை முன்கூட்டியே கணிப்பது, ரகசிய தகவல்களை திரட்டுவது போன்ற பல்வேறு பணிகளை இந்த உளவு அமைப்புகள் மேற்கொள்ளும்.
அதேபோல் பிரித்தானியாவின் வெளிநாட்டு உளவு பணிகளை M16 என்ற அமைப்பும், உள்நாட்டிற்கான உளவு பணிகளை M15 என்ற அமைப்பும் கவனித்து வருகிறது.
1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட M16, உலகின் சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
முதல் பெண் தலைமை
இந்நிலையில், M16 யின் 116 வருட வரலாற்றில் முதல் முறையாக அதன் தலைமை பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது M16 அமைப்பின் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை கவனித்து வரும் பிளேஸ் மெட்ரூவேலி(Blaise Metreweli) M16 தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
1999 ஆம் ஆண்டு M16 உளவு அமைப்பில், உளவு அதிகாரியாக பணியில் இணைந்த இவர், M15 அமைப்பின் இயக்குநர் பொறுப்பு வரை பணியாற்றியுள்ளார்.
I am delighted to announce that Blaise Metreweli will succeed me as Chief of #MI6 on 1 October 2025. Blaise has had a distinguished career as an intelligence officer and leader. She possesses all the qualities to be an outstanding ‘C’. Read more here 🔽https://t.co/w2HJ8cj1xs
— Richard Moore (@ChiefMI6) June 15, 2025
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நியமனம் என பிரதமர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது M16 தலைமை பொறுப்பில் உள்ள சர் ரிச்சர்ட் மூர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிளேஸ் மெட்ரூவேலி M16-யின் தலைமை பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |