பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் மற்றும் இளைஞர் உயிரிழப்பு! நடந்தது என்ன? பொலிசார் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
South Yorkshireல் தான் இச்சம்பவம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்துள்ளது. அதன்படி, Doncaster town centreல் மூவர் இடையே சண்டை ஏற்பட்டது.
அதில் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொண்டனர், இதில் 21 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு 17 வயதான சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மூன்றாவதாக 18 வயதான நபருக்கு ஏற்பட்ட சிறிய காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசார் கூறுகையில், கத்திக்குத்து நடந்த பகுதியில் பொலிசார் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் அதற்கேற்ப தங்களது வழித்தடங்களை திட்டமிடவும் முடிந்தவரை இந்தப் பகுதியை தவிர்க்க வேண்டும்.
இது தொடர்பில் புதிய தகவல்களை பெற காத்திருக்கிறோம், யாருக்காவது எதாவது தகவல் தெரியும் பட்சத்தில் எங்களிடம் அணுகலாம் என கூறியுள்ளனர்.