பிரித்தானியாவை தாக்கும் பெர்ட் புயல்: “உயிருக்கே ஆபத்து” மெட் அலுவலகம் எச்சரிக்கை!
பிரித்தானியாவின் பல பகுதிகளை பெர்ட் புயல் கடுமையாக தாக்கி வரும் நிலையில், “உயிருக்கே ஆபத்து” ஏற்படும் நிலைமை வரலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கை
பிரித்தானியாவை பெர்ட் புயல்(Storm Bert) தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், பல பகுதிகளில் கடுமையான காற்று மற்றும் கனமழை ஏற்பட்டுள்ளது.
நேற்று பல பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 82 மைல் வரை பதிவாகியதை அடுத்து பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் இன்றும் இருக்கும் நிலையில், தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் இரவு 9 மணி வரை மஞ்சள் நிற காற்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உயிருக்கே ஆபத்து
பல பகுதிகளில் காற்று எச்சரிக்கையுடன், மஞ்சள் நிற மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெரிய அலைகள், பறக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான வெள்ளப்பெருக்கு காரணமாக காயம் மற்றும் "உயிருக்கான ஆபத்து" ஏற்படலாம் என்றும் மெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மஞ்சள் வானிலை எச்சரிக்கை
பிரித்தானியாவில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ், தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் வானிலை எச்சரிக்கையானது சில பகுதிகளில் பலத்த காற்றுக்கான எச்சரிக்கையாகவும், சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
⚠️ 2 severe flood warnings now in force for the River Monnow at Forge Road, Osbaston and Skenfrith, meaning there is a danger to life.
— Cyfoeth Naturiol Cymru | Natural Resources Wales (@NatResWales) November 24, 2024
We urge people to take the warnings seriously,
Listen to the emergency services. Be ready to leave your home if asked.https://t.co/NS8kJZMwXa pic.twitter.com/LUKoHi7V88
தற்போதைய வானிலை நிலவரம் மற்றும் எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை பெற, மெட் அலுவலகத்தின் இணைய தளத்தைப் பார்வையிடவும் அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |