பிரித்தானியாவில் மரம் விழுந்து 9 வயது சிறுவன் பலி! மாலிக் புயல் கோர தாண்டவம்..
பிரித்தானியாவில் மாலிக் புயலின் தாக்கத்தால் மரம் விழுந்து 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இங்கிலாந்தின் Staffordshire கவுன்டியில் Winnothdale பகுதியில் உள்ள Hollington சாலையில் இன்று பிரபல 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மாலிக் புயலின் அதிவேக காற்றினால் வேருடன் சாய்ந்த மரம் ஒன்று 9 வயது சிறுவன் மற்றும் ஆண் மீது விழுந்தது.
இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
மதிக்கப்பட்ட மற்றோரு ஆண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Picture: PA
இந்த சம்பவத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் மரம் விழுந்ததில் 60 வயது பெண்மணி ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் மாலிக் (Malik) என பெயரிடப்பட்டுள்ள புயல், மணிக்கு சுமார் 147 மைல் (237 கிலோமீட்டர்) வேகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
இந்த புயலில் இதுவரை 2 உயிர்கள் பலியாகியுள்ளதாக பதிவாகியுள்ளன. லட்சக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்று தவித்து வருகின்றன.
இதற்கிடையில், நாளை Corrie எனும் மற்றோரு புயல் பிரித்தனையாவை தாக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
