பிரித்தானியாவில் முன்பின் தெரியாத 16 பேருக்கு லொட்டரியால் கிடைத்த மகிழ்ச்சி
பிரித்தானியாவில் முன்பின் தெரியாத 16 பேர் கொண்ட ஒரு பேஸ்புக் குழுவுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
முன்பின் தெரியாத 16 பேர் கொண்ட ஒரு பேஸ்புக் குழு
வேல்ஸ் நாட்டில் அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவந்த Rhian Owen (44) என்னும் பெண் ‘West Is Best Syndicate’ என்னும் குழுவை உருவாக்கியுள்ளார்.
பின்னர் Rhian வேலையை விட்ட நிலையிலும், அதே குழு பேஸ்புக் குழுவாக புதிய உறுப்பினர்களுடன் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், குழு சார்பில் லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்கள் குழுவிலுள்ள உறுப்பினர்கள்.
சனிக்கிழமை காலை, Rhianக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், அவரது பேஸ்புக் குழு வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 3.6 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருக்க, உடனடியாக குழு உறுப்பினர்களை அழைத்து அந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறியுள்ளார் Rhian.
விடயம் என்னவென்றால், பலர் புதிய உறுப்பினர்களாக அந்த குழுவில் சேர்ந்துள்ளதால், அவர்கள் இதற்கு முன் ஒருவரை ஒருவர் சந்தித்ததுகூட இல்லை.
தற்போது குழுவிலுள்ள 16 பேருக்கும், ஆளுக்கு சுமார் 212,000 பவுண்டுகள் கிடைக்க உள்ளன.
குழுவில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதைக் கடந்தவர்கள். உண்மையில், பரிசு விழுந்ததுமே, கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யவும், குடும்பத்துக்குத் தேவையான வாகனம் ஒன்று வாங்கவும், குடும்பமாக சுற்றுலா செல்லவும்தான் முடிவு செய்துள்ளார்களேயொழிய, யாருக்கும் ஆடம்பர செலவு செய்யும் எண்ணமே இல்லை என்பதுதான் ஆச்சரியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |